• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கான டெண்டரை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் எம்.பி நீதிமன்றத்தில் மனு

கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கான டெண்டரை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் எம்.பி நீதிமன்றத்தில் மனு

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கிரானைட் குவாரிகளை அமைப்பதற்கான டெண்டரை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் எம்.பி செல்லக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட 18 கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க கருப்பு, சிவப்பு, சாம்பல் நிற கிரானைட் குவாரிகளை அமைப்பதற்கான ஏலம் மற்றும் டெண்டர் அறிவிப்பை மாவட்ட ஆட்சியர், அக்டோபர் 9ம் தேதி அறிவித்து, அக்டோபர் 17ஆம் தேதி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. கிரானைட் எடுப்பதற்கு மத்திய சுரங்கங்கள் துறையிடம் அனுமதி பெற்ற பிறகு தான் மாநில அரசு அறிவிப்பை வெளியிட வேண்டும் என விதிகள் உள்ள நிலையில், மத்திய அரசின் அனுமதியை பெறாமல் பிறப்பிக்கப்பட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் எம்.பி செல்லக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Also read... 45 சவரன், கார் கொடுத்தும் வரதட்சணை போதவில்லை... திருமணமாகி 2 மாதமே ஆன புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை.. கணவர், மாமியார் கைது



சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் பெறாமல் வழிகாட்டுதல்களுக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ள இந்த டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

நவம்பர் 7ஆம் தேதி டெண்டர் திறக்கப்பட இருப்பதால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கோரி நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் செல்லக்குமார் தரப்பில் வழக்கறிஞர் முருகேந்திரன் முறையீடு செய்தார் முறையீட்டை கேட்ட நீதிபதிகள் ஓரிரு நாட்களில் வழக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: