ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

"ராஜராஜ சோழன் தமிழ் பேரரசன்.. இந்து அல்ல" - இயக்குநர் வெற்றிமாறன் கருத்திற்கு எம்.பி ஜோதிமணி ஆதரவு..

"ராஜராஜ சோழன் தமிழ் பேரரசன்.. இந்து அல்ல" - இயக்குநர் வெற்றிமாறன் கருத்திற்கு எம்.பி ஜோதிமணி ஆதரவு..

வெற்றிமாறன், ஜோதிமணி

வெற்றிமாறன், ஜோதிமணி

ராஜராஜ சோழன் ஒரு தமிழ் பேரரசன். நம்பிக்கையில் சைவர். தமிழில் சங்க, சைவ,வைணவ இலக்கியங்கள் உண்டு. இந்து இலக்கியம் என்று எதுவும் இல்லை.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  ராஜராஜ சோழனை குறித்த இயக்குநர் வெற்றிமாறன் கருத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாள் மணி விழாவையொட்டி, தமிழ் ஸ்டுடியோஸ் சார்பாக விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குனர் வெற்றிமாறன், “தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படிதொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்.

  சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். விடுதலைக்காக போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும்” என்று பேசினார். அவரது பேச்சு பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

  இதற்கு ஹெச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று நடிகர் கருணாஸ் இயக்குநர் வெற்றிமாறனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

  அதில் “ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து?ஏது இந்தியா?இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது; இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள் .இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம்” குறிப்பிட்டிருந்தார்.

  மேலும் “ராஜராஜ சோழனை இந்து அரசனாக்கி தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறிக்கிறார்கள் என இயக்குநர் வெற்றிமாறன் கூறிய கருத்து மிக உண்மையானது, சரியானது; அவரை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது” எனவும் கூறினார்.

  இதையும் வாசிக்க: அரசு பேருந்தில் பெண்கள் வேண்டுமென்றால் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணிக்கலாமா? - அமைச்சர் விளக்கம்

  இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் இயக்குநர் வெற்றிமாறனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.

  இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், “ராஜராஜ சோழன் ஒரு தமிழ் பேரரசன். நம்பிக்கையில் சைவர். தமிழில் சங்க, சைவ,வைணவ இலக்கியங்கள் உண்டு. இந்து இலக்கியம் என்று எதுவும் இல்லை. பாஜகவிற்கு தமிழக வரலாற்றைப் பற்றி எவ்வித அறிவும் ,அக்கறையும் இல்லை. மதவெறி மட்டுமே பிரதானம்.” எனவும்

  “சினிமா உட்பட எந்தக் கலைவடிவமும் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது.இயக்குனர் திரு. வெற்றிமாறன் அவர்களின் கருத்து சரியானதே.” எனவும் கூறியிருந்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Director vetrimaran, Jothimani, Rajarajacholan