முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.. காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி விமர்சனம்

சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.. காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி விமர்சனம்

ஜோதிமணி

ஜோதிமணி

Seeman: சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன்,தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது என ஜோதிமணி எம்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாலியல் குற்றவாளி என்றும் அவர் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி காட்டமாக விமர்சித்துள்ளார்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,நேற்று இவர்களை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், தூய்மை இந்தியாவை பற்றி பேசுகிறோம். ஆனால்,  இங்கு தூய்மை பணியாளர்களுக்கு எந்தவொரு உரிமையையும் இல்லை என்று தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியது தொடர்பான கேள்விக்கு, ’ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா ? அவரும் 400 கோடி பீரங்கி ஊழலில் சம்பந்தப்பட்டவர்தான். ஒரு ராணுவத்தை அனுப்பி 26,000 பேரை அழித்து உள்ளார் ராஜிவ் காந்தி. ராகுல் காந்தி தனது தந்தையை கொலை செய்த குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன் என்று தெரிவித்தார். ஆனால் அவர் யார் எங்களை மன்னிக்க’ என பதிலளித்தார்.

இதற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ட்விட்டரில் வினையாற்றியுள்ளார். இது தொடர்பாக, ‘சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன்,தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது' என அவர் பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Congress, Jothimani, Naam Tamilar katchi, Seeman