முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மக்களின் வாழ்வை மேம்படுத்துவதை இலவசம் என கொச்சைப்படுத்துவதா? இதுதான் மோடி, சீமானின் உண்மையான முகம்.. ஜோதிமணி ட்விட்

மக்களின் வாழ்வை மேம்படுத்துவதை இலவசம் என கொச்சைப்படுத்துவதா? இதுதான் மோடி, சீமானின் உண்மையான முகம்.. ஜோதிமணி ட்விட்

ஜோதிமணி

ஜோதிமணி

காலம் காலமாக பெண்கள் ஆட்டுக்கல்லையும்,அம்மியையும்,விறகடுப்பையும் கட்டிக்கொண்டு முதுகெலும்பு ஒடிய வேலைசெய்ய வேண்டுமா- ஜோதிமணி எம்.பி.

  • Last Updated :
  • Tamil Nadu, India

எளிய மகக்ளின் வாழ்வை மேம்படுத்தும் செயல்பாடுகளை இலவசம் என்று கொச்சைப்படுத்துவதா என பிரதமர் நரேந்திர மோடி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்கள் தொடர்பான அறிவிப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் தொலைக்காட்சி விவாதத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பேசிய பேச்சு இணையத்தில் வைரலானது.

இலவசங்களால் இந்தியாவுக்கு பாதிப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இலவச பொருட்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்து எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில்,  ‘மிக்சி, கிரைண்டர்,சிலிண்டர், இவையெல்லாம் ஏழை எளிய குடும்பங்களை,குறிப்பாக பெண்கள் வாழ்வை மேம்படுத்தியிருக்கிறது. காலம் காலமாக பெண்கள் ஆட்டுக்கல்லையும்,அம்மியையும்,விறகடுப்பையும் கட்டிக்கொண்டு முதுகெலும்பு ஒடிய வேலைசெய்ய வேண்டுமா?இல்லை இந்த வேலையெல்லாம் ஆண்கள் செய்வார்களா’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க: அதிமுக பொதுக்குழு தீர்ப்பு.. ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

top videos

    மேலும், லட்சக்கணக்கான கோடிகள் பெருமுதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்யும் திரு.நரேந்திர மோடியும், பாஜகவின் பி டீம் திரு. சீமானும் தான் எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்தும் செயல்பாடுகளை இலவசம் என்று கொச்சைப் படுத்துவார்கள். இதுதான் இவர்களின் உண்மையான முகம்’ என்றும் ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

    First published:

    Tags: Congress, Jothimani, Seeman