தாலிக்கு தங்கம் திட்டத்தைச் செயல்படுத்த கோரிக்கை விடுத்த
காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணிக்கு,
அதிமுக உறுப்பினர்கள் மலர்களை கொடுத்து நன்றி தெரிவித்தனர்.
நிர்வாகத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, "பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. 1.000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் மிகவும் வரவேற்கக்கூடியது. அதே வேளையில், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை திட்டத்தை கைவிட வேண்டாம். அந்த திட்டத்தின் மூலம் பலர் பயனடைந்துள்ளனர். ஊரகப் பகுதிகளில் மினி கிளினிக் பொதுமக்களுக்கு உதவியாக இருந்தது. ஆனால் ஆவை இல்லாததால், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தான் மக்கள் செல்ல வேண்டி உள்ளது என்றார்.
தாலிக்கு தங்கம் திட்டத்தை செயல்படுத்த விவாதத்தில் கோரிக்கை வைத்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணிக்கு, அதிமுக உறுப்பினர்கள் அவர்களது மேஜைகளில் இருந்த மலர்களைக் கொடுத்து நன்றி தெரிவித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.