அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் மேடையில் தனக்கு முதல் வரிசையில் நாற்காலி கொடுக்காததால் அதிருப்தியில் மேடையை விட்டு வெளியேறிச் சென்றார்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் Tansen Samaroh என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் குவாலியர் (கிழக்கு) தொகுதியின் எம்.எல்.ஏவான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சதிஷ் சிகர்வர் சென்றிருந்தார். அவருக்கு மேடையில் இரண்டாம் வரிசையில் நாற்காலி ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தனக்கு முன்வரிசையில் நாற்காலி ஒதுக்காததால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ சதிஷ் சிகர்வர் மாவட்ட நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் அவர் மேடையிலிருந்து வெளியேறினார். மாவட்ட நிர்வாகத்தினர் அவரை சமரசம் செய்ய முயற்சித்த போதும் அவர் சமாதானம் அடையாமல் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்.
#MadhyaPradesh: Enraged over not being given #Chair in front row during #TansenSamaroh, #Congress MLA from Gwalior (East), Satish Sikarwar left the programme in a huff. The district administration tried to convince him to sit in second row but he refused to listen to him. pic.twitter.com/VmYnL4dBsT
— Free Press Journal (@fpjindia) December 27, 2021
Also read: பிரதமர் மோடியின் புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 கார் - என்ன ஸ்பெஷல்?
எம்.எல்.ஏ சதிஷ் சிகர்வர் மேடையை விட்டு சென்ற போது அங்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் இருந்தார். அவர் வெளியேறியதை பார்த்து முத்லவரும் அதிர்ச்சியடைந்தார். இதனிடையே முன் வரிசையில் நாற்காலி ஒதுக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தினர் மீண்டும் எம்.எல்.ஏவை சமரசம் செய்து மேடைக்கு அழைத்து வந்தனர். இதனையடுத்து எம்.எல்.ஏவும் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றார்.
Also read: அங்கிள் என அழைத்த 18 வயது பெண் மீது 35 வயது கடைக்காரர் சரமாரி தாக்குதல்
He returned to the programme, only after district administration arranged a chair for him in front row. pic.twitter.com/5LABeZnYaa
— Free Press Journal (@fpjindia) December 27, 2021
நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ சதிஷ் சிகர்வர், “நிகழ்ச்சி அமைப்பாளர்கள் என்னை அவமதித்துவிட்டனர். நான் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி. நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு இது தெரிந்திருக்க வேண்டும். பாஜக தலைவர்களுக்கெல்லாம் முன் வரிசையில் நாற்காலி ஒதுக்கியிருந்தனர் ஆனால் எனக்கு ஒதுக்காதது என்னை அதிருப்திக்குள்ளாக்கியது. புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் டான்சென் நினைவாக நடத்தப்படும் நிகழ்ச்சி என்பதாலேயே நான் மீண்டும் மேடைக்கு வந்தேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.