மாதம் 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் மூலம் வரியை அதிகப்படுத்த காங். சூழ்ச்சி - சரத்குமார்

"அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்து மத்தியில் பாஜக ஆட்சி மலர வழி செய்ய வேண்டும்"

news18
Updated: April 17, 2019, 10:13 AM IST
மாதம் 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் மூலம் வரியை அதிகப்படுத்த காங். சூழ்ச்சி - சரத்குமார்
சரத்குமார் - நடிகர்
news18
Updated: April 17, 2019, 10:13 AM IST
மாதம் 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் மூலம் , வரியை அதிகப்படுத்தும் மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கும் காங்கிரஸின் சூழ்ச்சி தெரியவந்துள்ளதாகச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தென்காசியில் இறுதிக் கட்ட பிரச்சாரத்தின் போது பேசினார்.

நெல்லை மாவட்டம் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மாலை பிரச்சார நிறைவாக வாக்கு கேட்டு தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்தார் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது ”அதிமுக தலைமையிலான கூட்டணி தான் ஜனநாயகக் கூட்டணி. இதைச் சந்தர்ப்பவாத கூட்டணி என்று எதிர்க்கட்சியினர் கேலி செய்து வருகின்றன. உண்மையில் அவர்கள் வைத்திருப்பதுதான் சந்தர்ப்பவாத கூட்டணி “ எனப் பேசினார்.

மேலும் காங்கிரஸ் அறிக்கை குறித்துப் பேசியபோது “காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் ஏழைக் குடும்பத்திற்கு மாதம் 6,000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். இதன்மூலம் ஆண்டிற்கு 12000 கோடி செலவாகும்.

இதை எப்படிச் சமாளிப்பது என்று கேட்டால் மக்கள் வரிப்பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்க வேண்டியதுதானே என்று விளக்கமளிக்கிறார். மக்களின் மீது தேவையில்லாத வரியைச் சுமத்தி அதன் மூலம் இப்படிப் பணத்தை வழங்கும் திட்டம் என்பதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

எனவே இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் புறக்கணித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்து மத்தியில் பாஜக ஆட்சி மலர வழி செய்ய வேண்டும் ” இவ்வாறு கூறினார்.

அவருடன் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Also Watch : தேனியில் துப்பாக்கிச்சூடு நடத்தி அமமுக அலுவலகத்தில் சோதனையிட்ட பறக்கும் படை

First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...