தன்னியில்லா காட்டுக்கு மாற்றிவிடுவேன்: உதவி காவல் ஆய்வாளரை மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் -வீடியோ

Youtube Video

சென்னை வண்ணாரப்பேட்டையில், வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்த உதவி ஆய்வாளரை தன்னியில்லா காட்டுக்கு மாற்றி விடுவேன் என காங்கிரஸ் பிரமுகர் மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

  • Share this:
    கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை அமல்படுத்த, ஆங்காங்கே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் உதவி ஆய்வாளர் ராஜா என்பவர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது ஊரடங்கை மீறி சுற்றி திரிந்த நபர் ஒருவரை பிடித்து சோதனை செய்து அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், அபராதமும் விதித்தனர்.

    அந்த நபருக்கு ஆதரவாக கொருக்குபேட்டையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், 47வது வட்டத் தலைவருமான பிரபா என்பவர் உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    உதவி ஆய்வாளர் மீது புகார் அளித்தால் அவர் தப்பிக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர் ஒரு வண்டிக்காக தேவையில்லாமல் பிரச்சினை செய்ய வேண்டாம் என்றும் மிரட்டல் விடுத்தார்.

    ஏன் மாஸ்க் அணியவில்லை எனக் கேள்வி கேட்ட உதவி ஆய்வாளரிடம் உங்கள் காவல்துறையில் எத்தனை பேர் முகக்கவசம் அணிந்திருக்கிறார்கள் எனக் காட்டுமாறு கேள்விகேட்கிறார்.

    வாகனத்தை ஓட்டி வந்தவரின் வண்டியை பறிமுதல் செய்து விட்டதாகவும் வண்டிக்கு சொந்தக்காரரை காவல்நிலையத்திற்கு வரச் சொல்லுமாறும் உதவி ஆய்வாளர் குறிப்பிட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் பிரமுகர் பிரபா, இதேபோன்று பேசிக் கொண்டிருந்த பிரவீன் என்பவரை வேலூருக்கு டிரான்ஸ்பர் செய்து விட்டதாகவும், அதுபோன்று நடக்கவிடாமல் பார்த்துக் கொள்ளுமாறும் எச்சரித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: