ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி சட்டமன்றத் தேர்தல்வரை தொடரவேண்டும்! திருநாவுக்கரசு விருப்பம்

தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி சட்டமன்றத் தேர்தல்வரை தொடரவேண்டும்! திருநாவுக்கரசு விருப்பம்

திருநாவுக்கரசர் (கோப்புப் படம்)

திருநாவுக்கரசர் (கோப்புப் படம்)

எதிர்காலத்தில் கூட்டணி எப்படி அமையும் என்பதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து பேசி முடிவெடுப்போம்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி சட்டமன்றத் தேர்தல்வரை நீடிக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய தி.மு.கவின் திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, ‘காங்கிரஸை, நாம் பல்லக்கு தூக்க வேண்டிய தேவையில்லை. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தனித்து போட்டியிடவேண்டும்’ என்று பேசியிருந்தார். அவருடைய பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தவிவகாரம் குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசு, ‘கே.என்.நேருவின் பேட்டியை நான் இதுவரை பார்க்கவில்லை. தி.மு.கவின் அதிகாரப்பூர்வ கருத்து என்று நேரு எங்கேயும் குறிப்பிடவில்லை. ஆனால், இது தி.மு.கவின் கருத்தா, நேருவின் சொந்த கருத்தா என்று எனக்கு தெரியாது. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றி பெற்ற கூட்டணி இந்த கூட்டணி.

உள்ளாட்சித் தேர்தலில் தொடர வேண்டும் என்பதே என் கருத்து. உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்பதே என் கருத்து மட்டுமின்றி தி.மு.கவினரின் பெரும்பாலானோர் கருத்தும். மற்றபடி அவர் அவர்களுடைய கருத்து அவரவர்கள் சொல்லலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் கூட்டணி நீடிக்கிறதா இல்லை என்பது கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்.

கடந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் எடுத்த முயற்சியாலேயே மிகப்பெரிய கூட்டணி அமைந்தது. எதிர்காலத்தில் கூட்டணி எப்படி அமையும் என்பதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து பேசி முடிவெடுப்போம். நான், நாடாளுமன்ற வேட்பாளராக திருச்சியில் போட்டியிட்டபோது, கே.என்.நேரு எந்த சுணக்கமும் இன்றி பணியாற்றினார்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published:

Tags: Thirunavukkarasar