காவல்துறை பின்னணி கொண்ட ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்தது ஏன்? - சந்தேகம் கிளப்பும் கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

  • Share this:
தமிழகத்தில் ஆளுநராக கல்வியாளர்கள், சிறந்த அறிஞர்கள், சமூக வாழ்வில் உயர்ந்த நிலையை பெற்றவர்கள் உள்ளிட்டோரை  நியமிப்பது தான் வழக்கம். பொதுவாக எல்லை மாகாணங்களில்தான் காவல் துறை, ராணுவத்தைச் சார்ந்தவர்கள்  நியமிக்கப்படுவார்கள். அல்லது தீவிரவாத குழுக்கள், பயங்கரவாத குழுக்கள் இருக்கின்ற இடத்தில் நியமிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் ஆர்.என்.ரவியை ஆளுநராக  நியமித்து இருப்பதால் நாங்கள் அஞ்சுவதாக கருதவேண்டாம். ஏனென்றால் புதுவையில் கிரண்பேடி போன்ற காவல்துறை அதிகாரிகளை ஆளுநராக நியமித்து ஐந்தாண்டு காலம் அரசாங்கம் செயல்பட முடியாத அளவிற்கு சூழல் ஏற்பட்டது. எனவேதான் தமிழகம், புதுவை போன்ற மாநிலங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடையவர்களை ஆளுநராக நியமிக்க வேண்டும்.

பாரதிய ஜனதாவை சார்ந்தவர்களை கூட ஆளுநராக நியமிக்கலாம். தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் உள்ளிட்டோருக்கு  கூட இந்த வாய்ப்பை வழங்கி இருக்கலாம். தமிழகத்தில் காவல் துறை, ராணுவத்தை சார்ந்தவர்களை ஆளுநராக நியமித்து இருப்பது சந்தேகம் மற்றும் அச்சத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சிறந்த செயல்களைச் செய்து வருகிறார். பொதுவாக ஒரு கட்சி சார்ந்த அரசாங்கமாக இல்லாமல் தமிழக மக்கள் சார்ந்த அரசாங்கமாக இருக்கிறது. எல்லா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கும் அங்கீகாரமும் மரியாதையும் தரப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த வகையில் மகாகவி நினைவுநாளை மகாகவி நாளாக தமிழக அரசு அறிவித்து இருப்பதை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published: