தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதி

கே எஸ் அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போது, பரவத்தொடங்கிய கொரோனா பரவல் தற்போது வரை தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல், பொதுமக்கள் மட்டுமில்லாது, அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்களையும் பாதித்துவருகிறது. இந்தியாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்ட பலரையும் கொரோனா வைரஸ் பாதித்தது. தமிழகத்தைப் பொறுத்துவரை தற்போது கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது ஒரு நாளைக்கு 1,400-க்கும் குறைவானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்தநிலையில், காங்கிரஸின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இன்று காலை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: