மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ் - குஷ்பு கடும் காட்டம்

குஷ்பு

மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ் என்று பா.ஜ.கவில் இணைந்த குஷ்பு காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

 • Share this:
  காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று காலை நீக்கப்பட்ட குஷ்பு, நேற்றைய தினமே டெல்லியில் பா.ஜ.கவில் இணைந்தார். இன்று சென்னை திரும்பிய அவருக்கு, விமான நிலையத்தில் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, பா.ஜ.கவில் இணைவதற்கு, காரணமான அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு நன்றி தெரிவித்தார். பாஜக மாநிலத் தலைவரையும், காங்கிரஸ் மாநிலத் தலைவரையும் ஒப்பிட்டு பேசிய குஷ்பு, கட்சியில் இருந்து ஏன் வெளியே செல்கின்றனர் என்பதை சிந்திக்கக் கூட திறமை இல்லை என்று காட்டமாக விமர்சித்தார்.

  காங்கிரஸ் கட்சிக்காக 6 ஆண்டு நேரத்தையும் கடும் உழைப்பையும் கொடுத்ததாக கூறிய குஷ்பு, சிந்திக்கிற, மூளை வளர்ச்சி இல்லாத கட்சியாக காங்கிரஸ் உள்ளதாக சாடினார். காங்கிரஸ் கட்சியினர் தன்னை பற்றி தவறாக பேசுவதால், தானும் பதிலடி தருவதாக குஷ்பு விளக்கம் கொடுத்தார்.


  அதன்பின்னர் பாஜக தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு குஷ்பு சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, வீதிகள்தோறும் தாமரை மலரும் என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: