தமிழ்நாட்டுக்கு யார் என்ன செய்தார்கள்? : தேர்தல் பிரச்சார கையேடு வெளியீடு

தமிழ்நாட்டுக்கு யார் என்ன செய்தார்கள்? : தேர்தல் பிரச்சார கையேடு வெளியீடு

தேர்தல் பிரசார கையேடு வெளியீடு

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி பிரிவு சார்பில் ‘அதிமுக ஆட்சியில் வீணடிக்கப்பட்ட 10 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் தமிழ்நாட்டுக்கு யார், என்ன செய்தார்கள் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தேர்தல் பிரசார கையேடு வெளியிடப்பட்டது.

  • Share this:
    தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி பிரிவு சார்பில் ‘அதிமுக ஆட்சியில் வீணடிக்கப்பட்ட 10 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் தமிழ்நாட்டுக்கு யார், என்ன செய்தார்கள் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தேர்தல் பிரசார கையேடு வெளியிடப்பட்டது.

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றத வெளியீட்டு நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா தலைமை தாங்கினார். செயல் தலைவர் டாக்டர் விஷ்ணு பிரசாத், பொதுசெயலாளர்கள் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, ஆராய்ச்சித்துறை இணை செயலாளர் டாக்டர் ஹர்ஷவர்தன் ஷ்யாம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் அதிமுக ஆட்சிக்கு எதிரான தேர்தல் பிரசார கையேட்டினை தேசிய செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா வெளியிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் எல்லா நிலைகளிலும் ஊழல் நிறைந்திருக்கிறது. மோடி அரசாங்கத்திடம் அதிமுக அரசு முழுமையாக சரண் அடைந்துள்ளதால், ஊழல் ஆட்சியாளர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

    தமிழகத்தில் ஊழல் பெருகி இருப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் மாற்றத்துக்காக ஏங்குகிறார்கள். அத்தகைய மாற்றத்தை திமுக-காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே நிகழ்த்த முடியும்” என்றார்.

    அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் மீதான முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு ஏன் பதில் அளிக்கவில்லை என்றும், ஊழல் எதிர்ப்பு அமைப்பு தானாகவே முடங்கி போனது ஏன் என்பது உள்பட 10 கேள்விகளை ஆளும் அதிமுக அரசை நோக்கி எழுப்பினார்.

    தேர்தல் பிரசார கையேட்டில், தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட அவமதிப்பு, ஊழல், உறவினர் ஆதரவு கொள்கை மற்றும் அச்சுறுத்தல், பாஜக-அதிமுகவின் கூட்டணியால் தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடிகள், கல்வியில் தமிழக இளைஞர்கள் இழந்த வாய்ப்புகள் பற்றி தகவல்கள் புள்ளிவிவரங்களுடன் இடம் பெற்றுள்ளன.

    அத்துடன், விவசாயிகள், மீனவர்கள் புறக்கணிப்பும்-அடக்குமுறையும், காலியான கஜானா, மோசமடைந்து வரும் பொது சுகாதாரம் மற்றும் கொரோனாவை கையாள தவறான மேலாண்மை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, அதிகார துஷ்பிரயோகம், காங்கிரஸ் அரசும் பாஜக அரசும், தமிழ்நாட்டுக்கு யார், என்ன செய்தார்கள்? என்பன போன்ற தகவல்கள் தரப்பட்டுள்ளன.

    Must Read : தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2,579 பேருக்கு கொரோனா பாதிப்பு: சென்னையில் ஆயிரத்தை நெருங்கியது

     

    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: