நாம் தமிழர் கட்சி நிர்வாகியை தாக்கிய காங்கிரஸ் நிர்வாகி - அறந்தாங்கியில் சாலை மறியல்..!

நாம் தமிழர் கட்சி நிர்வாகியை தாக்கிய காங்கிரஸ் நிர்வாகி - அறந்தாங்கியில் சாலை மறியல்..!

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி நிர்வாகி மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 • Share this:
  அறந்தாங்கி அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகியை காங்கிரஸ் கட்சி நிர்வாகி தாக்கியதால் நடவடிக்கை எடுக்க கோரி இரவு நேரத்தில் நடந்த சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துவராகாம்பால்புரத்தை சேர்ந்தவர் பரத் (வயது 35)
  இவர் பெருங்காடு கிராமத்தை சேர்ந்த துரைராஜ் என்பவருக்கு பணம் கொடுத்து இருந்த நிலையில் அந்தப் பணத்தை இன்று திரும்ப கேட்ட போது அவரை பெருங்காடு வரச் சொன்னதாகவும் அங்கு சென்ற பரத்துடன் துரைராஜ் மற்றும் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தாகவும் சொல்லப்படுகிறது .

  இதனைத் தொடர்ந்து ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெருங்காடு கிராமத்தில் தேர்தல் நேரத்தில் கொடிக்கம்பம் நடப்பட்ட போது அந்த கொடிக்கம்பத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர் பிடுங்கி வீசியதாகவும் இதனைத்தொடர்ந்து அப்போது பரத் மற்றும் ராஜீவ்காந்தி இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தற்போது ராஜீவ்காந்தி வீட்டின் பக்கத்து வீட்டுக்காரரிடம் பணம் பெறச் சென்ற பரத்தை ராஜீவ்காந்தி உள்ளிட்ட சிலர் சேர்ந்து தாக்கியதாகவும் தாக்கியவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் இதனால் அவர்கள் மீது அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் காயமடைந்த பரத் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கட்சி நிர்வாகி மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

  அறந்தாங்கி செய்தியாளர் ராஜசேகர்
  Published by:Arun
  First published: