மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளுடன், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இருந்து இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அப்போது பேசிய அழகிரி, “தமிழகத்தில் அதிமுகவை, ஆட்சியில் அமரவிடாமல் செய்வது முக்கிய நோக்கம் என்று கூறினார். பெண்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் தேர்தல் அறிக்கயில் இடம் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
Must Read : நேருக்கு நேர் சந்தித்த அதிமுக-அமமுக வேட்பாளர்கள்: ‘அண்ணா...’ ‘தம்பி...’ பாசமழை
மத்திய அரசு கொண்டுவந்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாநிலத்தில் புதிய சட்டங்கள் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி உறுதியளித்தார்.
நீட் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
மேற்கண்ட இருபத்து ஏழு முக்கிய தலைப்புகளில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.