வாக்குச்சாவடி முன் மயங்கி விழுந்து உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகி

வாக்குச்சாவடி முன் மயங்கி விழுந்து உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகி

உயிரிழந்த சந்திரமோகன்

கோவில்பட்டியில் வாக்கு செலுத்தி விட்டு வெளியே வந்த போது மயங்கி விழுந்து காங்கிரஸ் மாவட்ட செயலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எவரஸ்ட் மாரியப்பன் நாடார் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் ஜோதி நகரை சேர்ந்த சந்திரமோகன் என்பவர் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார். வாக்கு செலுத்திய பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவர் கோவில்பட்டி அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.‌ இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த சந்திரமோகன் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி 63.6 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
Published by:Sheik Hanifah
First published: