• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுக கூட்டணியில் தொடரலாமா? வெளியேறலாமா? காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கருத்து என்ன?

திமுக கூட்டணியில் தொடரலாமா? வெளியேறலாமா? காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கருத்து என்ன?

கோப்புப்படம்

கோப்புப்படம்

நாளை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதனை பிறகே திமுக உடனான தொகுதி பங்கீடு முடிவு இறுதி பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தேவையான இடங்களை ஒதுக்கினால் மட்டுமே திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும் எனவும், இல்லையேல் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என கருத்து கேட்புக்கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

திமுக விடம் 30 தொகுதிகளில் கேட்கும் காங்கிரஸிற்கு 20-23 இடங்களை ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாநில பிரிவு தலைவர்களை தனித்தனியாக, சராசரியாக ஒருவருக்கு 5 நிமிடம் வீதம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் கருத்து கேட்கப்பட்டது.

மேலும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கும் பட்சத்தில் வெற்றி பெறுவது எவ்வாறு செயல்படவேண்டும் என்று ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில், கலந்து கொண்ட மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், தினேஷ் குண்டுராவிடம் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

நிர்வாகிகளிடம் கூட்டணியில் எத்தனை இடங்களை கொடுத்தால் ஏற்றுக்கொள்ளலாம், தனித்து நிற்கலாமா போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாவட்ட தலைவர்கள் திமுக விடம் குறைந்தபட்சம் 30 தொகுதிகளை பெற வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின்  சுயமரியாதை இலக்கா வண்ணம் தொகுதி கேட்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திமுக கூட்டணி தொடர வேண்டும். மரியாதையான இடங்கள் அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தனித்துவம் விட்டுவிடக்கூடாது, குறைவான தொகுதி இருக்கக்கூடாது  என சிலர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தென் மாவட்டங்களில் ராகுல் காந்தியின் வருகையின் பிறகு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டு இருப்பதாகவும், தென்மாவட்டங்களில்  அதிக தொகுதிகளை திமுகவிடம் காங்கிரஸ் கேட்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருசில மாவட்ட நிர்வாகிகள் திமுக விடம் கூட்டணி தொடரலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறைவான தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிடலாம் அல்லது கூடணிய இருந்து தனித்தோ, மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கலாம். பிற கட்சிகளிடமும் மூன்றாவது அணி குறித்து பேசலாம் எனவும் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேட்டி அளிக்கையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. திமுக விடம் பேச்சுவார்த்தை நடத்து கொண்டு இருக்கிறது. விரைவில் தொகுதி பங்கீடு எட்டப்படும் என தெரிவித்தார்.

Also read... சசிகலா அரசியலில் இருந்து விலகியது வருத்தமளிக்கிறது - தனியரசு

மேலும், அடுத்த கட்டமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் வீரப்ப மொய்லி, பள்ளம் ராஜீவ் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள்,செயல்தலைவர்கள் ஆகியோரிடம் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.

நாளை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதனை பிறகே திமுக உடனான தொகுதி பங்கீடு முடிவு இறுதி பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: