முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுகவுடன் கைகோர்த்த காங். கவுன்சிலர் - தலைவர் பதவி பறிபோனதால் திமுக ஷாக்

அதிமுகவுடன் கைகோர்த்த காங். கவுன்சிலர் - தலைவர் பதவி பறிபோனதால் திமுக ஷாக்

News18

News18

  • Last Updated :

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அதிமுக வுடன் கைகோர்த்து மறைமுக ஓட்டெடுப்பில் கலந்து கொண்டு அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற செய்ததால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள 11 வார்டுகளில் அதிமுக 5 இடங்களிலும் திமுக கூட்டணி 6 ( திமுக - 3 , காங் - 3 ) இடங்களில் வெற்றி பெற்றய்து. ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு 6 உறுப்பினர் ஆதரவு தேவை என்ற நிலையில் 8 வது வார்டில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர் கார்த்திக் அதிமுகவுடன் கைகோர்த்து ரகசிய வாக்குப் பதிவு கூட்ட அரங்கில் அதிமுக அணி வரிசையில் அமர்ந்து இருந்தார் .

கூட்டணி கட்டுப்பாட்டை மீற மாட்டார் என திமுகவினர் நினைத்து இருந்த நிலையில் மறைமுக வாக்கெடுப்பில் காங்கிரஸ் உறுப்பினர் ஆதரவுடன் மொத்தம் பதிவான 11 வாக்குகளில் 6 வாக்குகள் பெற்று 9வது வார்டு அதிமுக உறுப்பினர் சரண்யா (28) ஒன்றியக் குழு தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். திமுக கூட்டணிக்கு மெஜாரிட்டி இருந்தும் மறைமுக தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி செய்தது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

top videos
    First published:

    Tags: Local Body Election 2019