ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொலை குற்றவாளிகளை கொண்டாடக் கூடாது- கார்த்தி சிதம்பரம்

கொலை குற்றவாளிகளை கொண்டாடக் கூடாது- கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

எந்த சூழ்நிலையிலும் கொலையாளிகளை கொண்டாடக்கூடாது- கார்த்தி சிதம்பரம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று  காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் ஆகியோரில் பேரறிவாளனை கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

  அதே முறைப்படி தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ராஜீக் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 6 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக நளினி தெரிவித்துள்ளார்

  அதேவேளை, காங்கிரஸ் தரப்பில் இந்த தீர்ப்புக்கு விமர்சனம் கிளம்பியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது தவறான முடிவு; முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.

  மேலும், இந்த விசயத்தின் இந்தியாவின் உணர்வோடு இசைந்து உச்ச நீதிமன்றம் செயல்படாதது துரதிருஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோல், ‘ காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், சட்டம் விடுவிக்க அனுமதித்தால், அது அப்படியே இருக்கட்டும், ஆனால் மற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கும் இது பொருந்தும். எந்த சூழ்நிலையிலும் கொலையாளிகளை கொண்டாடக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Nalini, Rajiv convicts