தமிழகத்திற்கு இணக்கமான ஆட்சி மத்தியில் அமைய வேண்டுமென்பதற்காக தான் காங்கிரஸ்-திமுக கூட்டணி வைத்துள்ளது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்திக் சிதம்பரம் போட்டியிடுகிறார். கார்த்தி சிதம்பரம் கல்லல் அருகே உள்ள கீழப்பூங்குடி கிராமத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
Also Read: கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் தொண்டர்!
தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். குறிப்பாக விவசாய கடன் ரத்து, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும்.
Also Read : கல்யாண வீடு, லக்ஷ்மி ஸ்டோர்ஸ் எது பாக்குறீங்க? டிவி சீரியலை வைத்து கார்த்தி சிதம்பரம் பிரசாரம்!
மத்தியில் யார் ஆள வேண்டும் என்று முடிவெடுக்கக்கூடிய நேரம் இது தான். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க தயாராக உள்ளதாகவும் தன்னை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
Also Watch
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.