யோகி ஆதித்தியநாத் உருவ பொம்மையை எரித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வானது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: July 19, 2019, 10:49 PM IST
யோகி ஆதித்தியநாத் உருவ பொம்மையை எரித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வானது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
Web Desk | news18
Updated: July 19, 2019, 10:49 PM IST
உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்தின் உருவ பொம்மையை எரித்து சென்னை சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்ட 10 ஆதிவாசிக் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற முயன்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்தி, தடுப்பு காவலில் வைத்தது அம்மாநில பா.ஜ.க. அரசு.

அதனை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன், கே.வி.தங்கபாலு உட்பட 50-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


தொடர்ந்து உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்தை கண்டித்து அவரது உருவ பொம்மை எரித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியும் அவர்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வானது கடுமையாக கண்டிக்கத்தக்கது. பிரியங்கா காந்தி தனது கடமையை ஆற்றுவதற்கு சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதென்பது ஜனநாயகத்திற்கு எதிரான ஓன்று எனவும் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

Also see...

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...