அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உண்மையிலேயே எவ்வளவு...? முரண்பட்ட தகவல்களால் எழும் குழப்பம்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த முரண்பட்ட தகவலால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உண்மையிலேயே எவ்வளவு...? முரண்பட்ட தகவல்களால் எழும் குழப்பம்
அமைச்சர் செங்கோட்டையன்
  • Share this:
தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 17-ம் தேதி முதல், 1 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை துவங்கியது. இந்த ஆண்டு கொரோனோ பரவல் காரணமாக மக்களின் பொருளாதார சூழல் நலிவடைந்த நிலையில் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, சேர்க்கை துவங்கியது முதல்  தற்போது வரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று ஈரோட்டில் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் அரசு பள்ளிகளில் இதுவரை 1.75 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் பள்ளிக்கல்வித்துறை 5 லட்சத்திற்கும், மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் அமைச்சர் முரண்பட்ட கருத்தை பதிவு செய்துள்ளார். தற்போது பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருப்பது சரியான புள்ளிவிவரமா? அல்லது அமைச்சரின் புள்ளிவிவரம் சரியா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.


இதனால் வழக்கம் போல பள்ளிக்கல்வித்துறையும்  மற்றும் அமைச்சரும்  முரண்பட்ட கருத்து தெரிவித்துள்ளதால் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் குழப்பம் எழுந்துள்ளது. எனவே மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading