Home /News /tamil-nadu /

நெல்லை அருகே இரு சமூகத்தினர் இடையே மோதல் - 27 பேர் மீது வழக்குப் பதிவு

நெல்லை அருகே இரு சமூகத்தினர் இடையே மோதல் - 27 பேர் மீது வழக்குப் பதிவு

பள்ளியில் ஆரம்பித்த சிறு சண்டைக்காக கயிறால் கட்டி வைத்து அடித்த மக்கள்

பள்ளியில் ஆரம்பித்த சிறு சண்டைக்காக கயிறால் கட்டி வைத்து அடித்த மக்கள்

ஊரடங்கு நேரத்தில் இந்த சம்பவம் நடை பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள வேப்பன்பாடு கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தமான 27 பேரில் ஒருவரை போலீசார் கைது செய்து 12 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  மற்ற 15 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கூடங்குளம் அருகில் உள்ள புல்லமங்கலம். இந்த கிராமத்தைச் சேர்ந்த முருகன், இசக்கி முத்து ஆகிய இரு இளைஞர்கள் குடிபோதையில் தகராறு செய்வதற்காக அருகில் ஆதி திராவிட மக்கள் வசிக்கும் வேப்பன்பாடு என்ற கிராமத்திற்கு சென்று உள்ளனர். இதனிடையே இந்தக் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்களை அடிக்க முற்பட்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தகராறில் ஈடுபட்ட இரு இளைஞர்களை ஊரில் உள்ள கோவிலில் கட்டிவைத்து கூடன்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    தகவலின் அடிப்படையில் கூடங்குளம் போலீசார் இரு இளைஞர்களையும் மீட்டு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் நேற்று வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் விவசாய வேலை செய்வதற்காக புல்லமங்கலம் ஊர் வழியாக சென்று உள்ளனர். அவர்களை வழிமறித்த புல்லமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்துகொண்டு மூன்று இளைஞர்களையும் ஜாதி பெயரை சொல்லி திட்டி மின் விளக்கு கம்பத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர்.

    இந்த சம்பவம் நேற்று வேப்பம்பாடு கிராம மக்கள் கூடங்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து மூன்று இளைஞர்களையும் மீட்க சென்றுள்ளனர். ஆனால் போலீசார் கட்டிவைத்து அடுத்தவர்களை கைது செய்யாமல் மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட 3 பேரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்ற முற்பட்டுள்ளனர். இதற்கு வேப்பம்பட்டு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் சம்பவ இடத்திற்கு ராதாபுரம் தாசில்தார் செல்வன் மற்றும் வள்ளியூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன் பின்னர் தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில் பின்னர் 3 பேரையும் கட்டி வைத்து அடித்த புல்லமங்கலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 12 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவரின் தந்தையும் அவரது தம்பியும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஊரடங்கு நேரத்தில் இந்த சம்பவம் நடை பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக வேப்பன்பாடு கிராமத்தை சேர்ந்த மக்கள் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Nellai

    அடுத்த செய்தி