அருப்புக்கோட்டையில் இருதரப்பினரிடையே மோதல்.. துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டி அடித்த போலீஸ்..!

அருப்புக்கோட்டையில் இருதரப்பினரிடையே மோதல்.. துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டி அடித்த போலீஸ்..!
  • News18
  • Last Updated: January 4, 2020, 10:52 AM IST
  • Share this:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே எம்.ரெட்டியபட்டி அருகே இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி அனைவரையும் விரட்டி அடித்தனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவிற்காக, செங்குளம் கிராமத்திலிருந்து மதுரை சென்று திரும்பிய வாகனத்தின் மீது பரளச்சியில் கற்கள் வீசப்பட்டன.

இதனால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்தனர். பின்னர் இருதரப்பினரும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர்.


பின்னர் தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், தென் மண்டல துணை ஜஜி ஆனி விஜயா ஆகியோர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் பதற்றத்தை தணிக்கும் விதமாக 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அதோடு கலவரங்களின் போது பயன்படுத்தப்படும் வஜ்ரா வாகனம் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் ஆகியவைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்