Home /News /tamil-nadu /

தமிழக சட்டப் பேரவை : மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்

தமிழக சட்டப் பேரவை : மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்

தமிழக சட்டப் பேரவை

தமிழக சட்டப் பேரவை

Tamil Nadu Assembly : தமிழக சட்டப் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரின், இரண்டாம் நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தமிழக சட்டப் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரின், இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கியது. இன்று, மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாகிக்கப்பட்டு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அதன்படி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜீனத் ஷெர்புதீன், இராஜேந்திரன் , மாயவன், முருகானந்தம், கோவிந்தன், லோகாம்பால், நன்மாறன், விநாயகமூர்த்தி, கண்ணன், சண்முகம், அண்ணாமலை, மோசஸ் ஆகியோருக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

    மேலும், மறைந்த முன்னாள் ஆளுநர் ரோசய்யா, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 11 இராணுவ அலுவலர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் துரைமாணிக்கம், கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார், மனித உரிமை செயற்பாட்டாளர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு ஆகியோர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து, வினாக்கள் விடைகள் நேரம் தொட்ங்கியது. இதில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து பேசுகின்றனர். இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர், துரைமுருகன், கே.என்.நேரு,ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பதிலளித்து பேச உள்ளனர்.

    அதனைத்தொடர்ந்து, பல்வேறு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. குறிப்பாக, கடலூர், காஞ்சிபுரம், சிவகாசி, கரூர், தாம்பரம், கும்பகோணம் ஆகிய மாநகராட்சிகள் தொடர்பான சட்டமுன்வடிவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்கிறார்.

    2022ம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்பு( திருத்தச் ) சட்டமுன்வடிவை வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்கிறார். அந்த வகையில், மழை நிவாரணம், பொங்கல் பரிசு தொகுப்பு தொகை, நீட் விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Must Read : ராஜேந்திர பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

    அதன் பின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசுவார்கள். அத்துடன் இன்றைய சட்டப்பேரவை நிறைவு பெறும்.
    Published by:Suresh V
    First published:

    Tags: MK Stalin, TN Assembly

    அடுத்த செய்தி