முகப்பு /செய்தி /தமிழ்நாடு / துணிவு பட பாணியில் வங்கிக் கொள்ளை முயற்சி.. இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..!

துணிவு பட பாணியில் வங்கிக் கொள்ளை முயற்சி.. இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..!

கலீல் ரகுமான் - மதுரை உயர்நீதிமன்றம் கிளை

கலீல் ரகுமான் - மதுரை உயர்நீதிமன்றம் கிளை

ஆனால் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது மிகப்பெரிய குற்றம். எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

திண்டுக்கல் - தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. வங்கியில் ஜனவரி 24ஆம் தேதி காலை நான்கு பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த கலீல் ரகுமான் (வயது 25) கையில் மிளகாய் பொடி, ஸ்பிரே, கட்டிங் பிளேடு உட்பட ஆயுதங்களுடன் வங்கி உள்ளே சென்றுள்ளார். பணியில் இருந்த ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி ஸ்பிரே அடித்துள்ளார். பின்னர் தான் கொண்டு வந்த கயிற்றால் வங்கி ஊழியர்கள் 3 பேரை கையை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றார்.

கொள்ளையனின் பிடியில் இருந்து தப்பித்த வங்கி ஊழியர் ஒருவர் வெளியே ஓடி வந்து பொதுமக்களை பார்த்து ‘கொள்ளை.. கொள்ளை..’ என கூச்சலிட்டு அழைத்தார். உடனடியாக உள்ளே சென்ற பொதுமக்கள் கலீல் ரகுமானை சுற்றிவளைத்து பிடித்தனர். இதனை அடுத்து திண்டுக்கல் மேற்கு காவல்துறை இவரை கைது செய்தது.

இதையும் படிக்க :  மது அருந்தி வாகனம் ஓட்டிய மாணவர்கள் - நூதன தண்டனை விதித்த மதுரை நீதிமன்றம்!

இந்த நிலையில், இந்த வழக்கு  உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், மனுதாரர் மன நிலை சரியில்லாதவர். எனவே நிபந்தனையுடன் ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார். அரசு தரப்பில், மனுதாரர் மீது இதற்கு முன் வழக்குகள் எதுவும் பதிவு செய்யபடவில்லை. ஆனால் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது மிகப்பெரிய குற்றம். எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, மனுதாரர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். சாட்சியங்களை கலைக்க கூடாது, திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் நாள் தோறும் காலை மறு உத்தரவு வரும் வரை கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

First published:

Tags: Bank, Dindigul, Madurai, Thunivu