• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ‘தலைமறைவாகப் போவதில்லை.. சாட்சிகளை கலைக்கப்போவதில்லை..’ - முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்

‘தலைமறைவாகப் போவதில்லை.. சாட்சிகளை கலைக்கப்போவதில்லை..’ - முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

செல்வாக்கான நபர் என்பதால், சாட்சிகளை கலைக்க கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • Share this:
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி  காவல் ஆணையர் அலுவலத்தில் அளித்த புகாரில், திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி விட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததுடன், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, அடையாறு அனைத்து மகளிர் போலீசார்  ஜூன் 20ம் தேதி கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.
மணிகண்டன் தரப்பில்,  தனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது தெரிந்தே, ஐந்து ஆண்டுகள் தன்னுடன் நடிகை  வசித்து வந்ததால் பாலியல் வன்கொடுமை என்ற கேள்வியே எழவில்லை என வாதிடப்பட்டது.

கருக்கலைப்புக்கு நடிகையே ஒப்புதல் அளித்ததால்  கருக்கலைப்புக்கு கட்டாயப்படுத்தியதாக கூற முடியாது. மேலும் எந்த அந்தரங்க படங்களையும் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும், புலன் விசாரணை முடிந்து ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது எனவும்  காவலில் வைத்தும் விசாரிக்கப்பட்டு விட்டதால் மேற்கொண்டு தான்  தலைமறைவாகப் போவதில்லை எனவும் சாட்சிகளை கலைக்கப் போவதில்லை  எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், நடிகை சாந்தினி தரப்பில், மனைவியை விவாகரத்து  செய்து விட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் தான் அவருடன் கணவன் - மனைவியாக வாழ தொடங்கியதாகவும், சட்டமன்றத்துக்கும் மனைவி என தன்னை அழைத்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவல்துறை தரப்பில், மணிகண்டனை காவலில் வைத்து விசாரணை நடத்தியதில், அவரது ஒரு மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்ட போதும், நடிகைக்கு படங்களும், குறுந்தகவலும் அனுப்ப பயன்படுத்தப்பட்ட மொபைல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. செல்வாக்கான நபர் என்பதால், சாட்சிகளை கலைக்க கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  நிர்மல்குமார், இன்று அளித்த தீர்ப்பில், மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி,2 வாரங்களுக்கு காவல்துறை முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திடவும், அதன்பிறகு விசாரணைக்கு தேவைப்படும்போதெல்லாம் ஆஜராகவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மணிகண்டனின்பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: