ஊரடங்கில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் - தமிழக அரசு அறிவிப்பு

கோப்பு படம்

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

 • Share this:
  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானிய திட்ட மதிப்பீடாக 280 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் அந்த திட்ட மதிப்பீட்டு தொகையில் இருந்து 168 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வங்கிக் கடனுதவி பெறுவதற்கு செலுத்த வேண்டிய முத்திரைத்தாள் கட்டணத்திற்கான விலக்கு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  வரும் செப்டம்பர் மாதத்துடன் காலாவதியாகும் தொழில் சார்ந்த அனைத்து உரிமங்களும் டிசம்பர் மாதம் வரை செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  சிட்கோ மனைகள் ஃபாஸ்ட் ட்ராக் அடிப்படையில் தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் பணிபுரியும் தகுதி உடைய நபர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் கொரோனா தடுப்பூசி போட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

  ஆட்டோ மற்றும் டாக்சி உள்ளிட்டவற்றிற்கான சாலைவரி கட்டணங்கள் செலுத்த 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறை மூலம் வழங்கப்படும் மூலதன மானியத் தொகையை மூன்று தவணைகளாக வழங்குவதற்கு பதில் ஒரே தவணையாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொழில் வரி செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
  Published by:Vijay R
  First published: