லேப்டாப் வாங்கினால் ஒன்றரை கிலோ வெங்காயம் இலவசம்! கடலூரில் வியாபார யுக்தி

  • News18
  • Last Updated :
  • Share this:
நாடு முழுவதும் வெங்காய விலை உயர்வு பொதுமக்களை வாட்டி வதக்கிக் கொண்டிருக்கும் நிலையில், சிறு தொழில் செய்பவர்கள் வெங்காயத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்திவருகின்றனர். 

வெங்காயத்தை உரிக்காமலேயே இல்லத்தரசிகளின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துவிடும் வகையில் விலை உயர்வு உள்ளது. இதனால் சாமானிய மக்கள் வெங்காயத்தைப் பயண்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் நகரின் மையப்பகுதியில் பிள்ளையார் கோயில் அருகே உள்ள கணினி மற்றும் அதன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யக்கூடிய (தமிழ் கம்ப்யூட்டர் )வணிக நிறுவனம் உள்ளது. தற்போது நாட்டில் வெங்காயத்திற்கு ஏற்பட்டுள்ள கடும் கிராக்கி மற்றும் விலை உயர்வால் நாளுக்குநாள் வெங்காயத்தின் மவுசு அதிகரித்து வருவதால் வெங்காயத்தைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் விளம்பரங்கள் வெளிவரத் துவங்கியது.

நேற்று கடலூரில் நடைபெற்ற திருமணத்தில் வெங்காயத்தை மணமக்களுக்கு நண்பர்கள் பரிசளித்தனர். தற்போது கடலூரில் வெங்காயத்தைப் பயன்படுத்தி வியாபாரம் செய்துள்ளனர். கடலூரில் உள்ள கணிணி விற்பனை கடையில் கணினி அல்லது மடிக்கணினி வாங்கினால் ஒன்றரை கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தஞ்சாவூரில் மொபைல்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. நாடு முழுவதும் வெங்காய விலை மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்திவரும் நிலையில சிறு தொழில் செய்பவர்கள் வெங்காயத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்திவருகின்றனர்.

Also see:

Published by:Karthick S
First published: