• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

மாதிரி படம்

மாதிரி படம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது.

  • Share this:
    தமிழ்நாட்டில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இம்மாவட்டங்களுக்கு, அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய 2 தேதிகளில், 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 27 ஆயிரத்து 3 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று மாலையுடன் நிறைவடைந்தது. வேட்புமனு மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் 25ம் தேதி ஆகும்.

    இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்தனர். குறிப்பாக வாலாஜாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏராளானமானோர் குவிந்ததால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஏராளமான அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் திரண்டதால் காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியத்தில் காலியாக இருக்கும், 6-வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கும் வரும் 9ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, அதிமுக வேட்பாளர் கண்ணன், 500க்கும் மேற்பட்டோருடன் மேளதாளத்துடன்ஊர்வலமாக சென்று வேட்புமனு வழங்கினார். இதனால், வெண்ணந்தூர் - ராசிபுரம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அமமுக வேட்பாளர் கோபால், குதிரை வண்டியில் சென்று வேட்புமனு அளித்தார். இதேபோன்று, தேமுதிக சார்பில் சாந்தி, பாமக சார்பில் கந்தசாமி ஆகியோரும் ஊர்வலமாக சென்று மனுத் தாக்கல் செய்தனர்.

    Also Read : அதானி துறைமுகத்தில் ஹெராயின் பறிமுதல்: மத்திய அரசு மீது காங்கிரஸ் விமர்சனம்

    ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பண பட்டுவாடாவை தடுக்கும் நோக்கில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கீழ்குப்பம் பகுதியில், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கும்பகோணத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஆவணங்கள் இன்றி 2 லட்சத்து11 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 10 கிலோவுக்கு மேற்பட்ட வெள்ளிப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்கள், சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: