தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள ஆயிரத்து 635 ஊழல் வழக்குகளையும் விரைந்து விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் நடத்துனராக பணியாற்றிய அண்ணாதுரை என்பவர், கடந்த 2018-ம் ஆண்டு ஓய்வுபெற்ற நிலையில், இதுவரை தனக்கு வழங்க வேண்டிய ஓய்வுப் பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழகம் முழுவதும் 1983-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பல்வேறு நீதிமன்றங்களில் ஆயிரத்து 635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையை மேற்கோள்காட்டினார்.
இதையும் படிங்க: பகல் 2 மணி முதல் இரவு 8 வரை.. டாஸ்மாக் நேரத்தை ஏன் மாற்றக்கூடாது - நீதிமன்றம் கேள்வி!
இதனால், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடுவர் என்பதால், தேவையில்லாமல் ஊழல் வழக்குகளை தள்ளி வைக்காமல் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.