தமிழகம் முழுவதும் ஜூலை மாத நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் ஜூலை மாத நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு
கோப்புப்படம்
  • Share this:
தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடிவடையவுள்ளது. இந்தநிலையில், ஜூலை 31-ம் தேதிவரை தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும், சில கட்டுப்பாடுகளையும் பிறப்பித்துள்ளது. ஜூலை மாதங்களில் வரும் 5-7-2020, 12-7-2020, 19-7-2020, 26-7-2020 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பேருந்து போக்குவரத்து ஜூலை மாதம் 15-ம் தேதிவரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading