கட்டுக் கட்டாக சிக்கிய ரொக்கம்... துரைமுருகன் மகன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு...!

பூஞ்சோலை சீனிவாசனின் சிமென்ட் குடோனில் இருந்து, 11 கோடி 83 லட்சம் ரூபாய் பணம், மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது.

கட்டுக் கட்டாக சிக்கிய ரொக்கம்... துரைமுருகன் மகன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு...!
கதிர் ஆனந்த்
  • News18
  • Last Updated: April 10, 2019, 4:26 PM IST
  • Share this:
வேலூரில் கட்டுக்கட்டாக ரொக்கம் சிக்கிய விவகாரத்தில் வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வீட்டில் கடந்த மாதம் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்கள், 10 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் அதிரடி சோதனை!


இதையடுத்து துரைமுருகனின் நெருங்கிய நண்பரும் திமுக பிரமுகருமான, பூஞ்சோலை சீனிவாசனின் சிமென்ட் குடோனில் இருந்து, 11 கோடி 83 லட்சம் ரூபாய் பணம், மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது.

 பழிவாங்கும் எண்ணத்தில் செயல்படும் தேர்தல் ஆணையம்: துரைமுருகன் குற்றச்சாட்டு!

இந்த நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், காட்பாடியில் உள்ள காவல் நிலையத்தில் கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மனு ஒன்றை தேர்தல் செலவின அலுவலர் தாக்கல் செய்தார்.அந்த மனுவில் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தபோது காட்டிய பணத்தை விட, அதிகமாக ரொக்கப்பணம் வைத்திருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். இதை தொடர்ந்து போலீசார், நீதிபதியிடம் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து, கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Also Watch
First published: April 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்