டி.ஆர் பாலு, தயாநிதி மாறன் மீதான புகார்களுக்கு எதிரான மனு - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

”எவரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த கருத்தை தாங்கள் தெரிவிக்கவில்லை”

டி.ஆர் பாலு, தயாநிதி மாறன் மீதான புகார்களுக்கு எதிரான மனு - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டி.ஆர் பாலு மற்றும் தயாநிதி மாறன்
  • News18
  • Last Updated: May 23, 2020, 4:32 PM IST
  • Share this:
திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பட்டியலினத்தவர்கள் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசிய, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருப்பதால், ஜாமின் வழங்க அவரது தரப்பு கேட்ட நிலையில், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன் டி. ஆர் பாலு ஆகியோர் திமுவின் " ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் " பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளரை சந்தித்து வழங்கினார்.


அப்போது, தலைமைச் செயலாளர் தங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார் எனவும், தாங்கள் என்ன  தாழ்த்தப்பட்ட ஆட்களா? எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியுள்ளதாக கூறி, கோவை சேர்ந்த சேகர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை வெரைட்டி ஹால் காவல்நிலையத்தில் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு தரப்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில், எவரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த கருத்தை தாங்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ளனர். இந்த மனுவை நீதிபதி நிர்மல்குமார் இன்று பிற்பகல், அவசர வழக்காக விசாரித்தார்.

அப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழி வாங்கும் நோக்கிலேயே தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு எதிராக புகார் அளித்தவரும் அனுமன் சேனா அமைப்பை சேர்ந்தவர் என்பதால் இதில் அரசியல் உள்நோக்கும் உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தில் பெறப்பட்ட லட்சக்கணக்கான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தான் தலைமை செயலாளரை சந்தித்தோம். ஆனால், அவர் தங்களை முறையாக நடத்தவோ இல்லை என்றும் தலைமை செயலாளரின் அறவுறுத்தலின்படியே தங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் இருவர் தரப்பிலும் வாதிடப்பட்டது.

தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் வகையில் இருவரும் பேசியுள்ளதால் இருவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தயாநிதி மாறன் மற்றும் டி.ஆர். பாலு மீது பதிவான வழக்கில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை மே 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை, புகார் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்க கூடாது எனவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading