Home /News /tamil-nadu /

தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

Bus Fare | சுதந்திர தின விடுமுறையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வரும் திங்கள்கிழமை சுதந்திர தினம் என்பதால், சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.   இந்நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது

    இணையதளத்தில் வெளிப்படையாகவே கூடுதல் கட்டணம் குறித்த விவரங்கள் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது அதிகபட்சமாக 4000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

    சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு 3,870 ரூபாயும், மதுரைக்கு 3000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. திருச்சிக்கு 2,500 ரூபாய் முதல் 2,800 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது.  ஒசூரில் இருந்து கோவில்பட்டிக்கு 2,800 ரூபாய் முதல், அதிகபட்சமாக 3,449 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து ஆம்னி பேருந்து கூட்டமைப்பை சேர்ந்த திருஞானத்திடம் கேட்ட போது, ஒன்றிரண்டு பேருந்துகள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கலாம் என்றும், எல்லா பேருந்துகளும் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கவில்லை என்றும் கூறினார்.

    Also see... திருச்சிற்றம்பலம் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வெளியீடு…

    தமிழக அரசிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கூறினார். ஆம்னி பேருந்து தொழில் முற்றிலுமாக நலிவடைந்துவிட்டதாகவும், ஒரு பேருந்துக்கு வரி உட்பட நாளொன்றுக்கு 10000 ரூபாய் செலவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Bus fare hike, Independence day, Omni Bus

    அடுத்த செய்தி