தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் எழுத்து மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்க புகார் பதிவேடு வைக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுகிறது, பொருட்கள் கையிருப்பு இல்லாமல் இருப்பது போன்ற பல புகார்களை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை இணையத்தில் புகாராக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற மற்றும் எளிய மக்கள் இணையத்தில் புகார் செய்வது சிரமம் என்று தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணியும் திருவள்ளூரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேஷன் கடைகள் தொடர்பான புகார்களை இணையவழியில் தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளது.
ரேஷன் கடைகளில் நேரடியாக எழுத்து மூலம் தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு கடையிலும் புகார் பதிவேடு வைக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்கள். இதனால் புகாரை உடனடியாக தெரிவிக்கவும் அதன் மீது தொடர்புடைய அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முடியவும் என்று கூறினார்.
இந்நிலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் எழுத்து மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்க புகார் பதிவேடை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் இணைய வழியில் புகார் தெரிவிக்கும் நடைமுறையுடன் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் புகார் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ration card, Ration Shop