சமீபத்தில் நடைபெற்ற திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஊடகக் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு சார்பில் திமுகவைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கனகராஜ், சி.மகேந்திரன் உள்ளிட்டோர் டி.ஜி.பி திரிபாதியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
இதைத் தொடர்ந்து கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திமுகவைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அளித்த பேட்டி: ”கடந்த 27ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஊடக கண்காணிப்புக் குழுவின் சார்பாக இன்று தமிழக டிஜிபியைச் சந்தித்து ஒரு மனு அளித்துள்ளோம். அதில் சமீபகாலமாக தமிழகத்தில் நியாயத்தை, உண்மையை எழுதக்கூடிய பத்திரிக்கையாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் சமூக ஊடகங்கள் வாயிலாக தாக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
Also read: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையைத் திரும்பப்பெறக் கோரி மாணவர்கள் கடிதம்
குறிப்பாக பத்திரிக்கையில் பணியாற்றக்கூடிய பெண் சகோதரிகளுக்கு எதிராக நடைபெறக்கூடிய ஆபாசமான தாக்குதல்கள் மீது போலீசில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், மத்திய மாநில அரசுகளின் ஆதரவு பெற்றவர்கள் புகார் கொடுத்தால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. எனவே, இந்நிலையை மாற்றி பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
எந்த அரசியல் இயக்கத்திற்கும் உட்படாத இளைஞர்கள் தங்களுடைய உரிமைக்காக சமூக வலைதளங்களில் குரல் கொடுப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுங்கட்சியினர் நேரடியாக கொலை மிரட்டல் விடுக்கின்றனர். பெண்களாக இருந்தால் அவருடைய தனிப்பட்ட வாழ்வைக் குறிவைத்து தவறாகச் சித்தரிக்கின்றனர். இதனைக் கண்டிக்கும் விதமாக, இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கக்கோரி, டிஜிபியிடம் கேட்டுள்ளோம்.
சைபர் கிரைம் அதிகாரிகள், மாநகர காவல் ஆணையர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்வதாக அவர் கூறியிருக்கிறார்.
ஒருவேளை இதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக தலைவர்களுடன் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கையாக தேவைப்பட்டால் சட்டப்போராட்டம் நடத்துவதற்கும் தயாராக இருக்கிறோம்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Police complaint, Youtube