நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்..

நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்..

நீட் தேர்வு -

நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் 3 மாணவர்கள் தற்கொலை தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலக்கூடிய மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாகவும் மாநில பாடத்திட்டத்தில் பயிலக்கூடிய மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளதாகவும் அவரது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.Also read: தற்கொலையை வைத்து திமுக அரசியல் செய்கிறது - ஹெச்.ராஜா

மேலும், நீட் தேர்வு தொடர்பாக  மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உரிய ஆலோசனைகளை வழங்கவில்லை என்றும் புகாரில் தெரிவித்துள்ளார். எனவே, மாணவர்களின் தற்கொலை தடுக்கும் வகையில் மனித உரிமைகள் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது இந்த மனு விசாரணை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எதிர்வரும் நாட்களில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Rizwan
First published: