• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீதிமன்றம் கொடுக்காத ஒரு தடையை காரணம் காட்டி அலைக்கழிப்பு - தமிழக தகவல் ஆணையம் மீது குற்றச்சாட்டு!

நீதிமன்றம் கொடுக்காத ஒரு தடையை காரணம் காட்டி அலைக்கழிப்பு - தமிழக தகவல் ஆணையம் மீது குற்றச்சாட்டு!

தலைமை செயலகம்

தலைமை செயலகம்

நீதிமன்றம் கொடுக்காத ஒரு தடையை காரணம் காட்டி 15 ஆண்டுகளாக தகவல்களை வழங்காமல் அலைக்கழிப்பதாக தமிழ்நாடு தகவல் ஆணையம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • Share this:
    தமிழக சட்டமன்ற அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராக பணியாற்றிய ரவிச்சந்திரன், தனது பணியை நிரந்தரமாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், தற்காலிக பணியை நிரந்தரம் செய்வதற்கு சட்ட விதிகள் ஏதும் இல்லை என அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், தன்னுடன் பணியாற்றிய பல ஊழியர்களுக்கு பணி நிரந்தரமாக்கப்பட்டதாக ரவிச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், இது தொடர்பாக தகவல்கள் பெற தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 13 கேள்விகளை தகவல் ஆணையத்துக்கு ரவிச்சந்திரன் அனுப்பினார். அதற்கு இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளதால் ரவிச்சந்திரன் கோரும் தகவலை வழங்க முடியாது என்று பதில் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளரிடம் கடிதம் வாயிலாக கேட்டபோது, வழக்கு நிலுவையில் இருந்தாலும், தகவல் வழங்க தடை ஏதும் இல்லை என பதில் வந்ததாக ரவிச்சந்திரன் கூறுகிறார்.

    தமிழக தலைமை செயலாளர், சட்ட துறை செயலாளர் ஆகியோருக்கு தன்னிடம் உள்ள ஆதாரங்களை வைத்து கடிதம் எழுதியுள்ள ரவிச்சந்திரன், தனக்கு நியாயம் வழங்குவது மட்டும் இல்லாமல், இவ்வளவு காலம் சட்டவிரோதமாக தன்னை அலைக்கழித்து அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: