அமைச்சர் துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமை, நில அபகரிப்பு புகார்.

துரைமுருகன்

இந்த புகாரின் பேரில்  விசாரணை நடத்தி 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 • Share this:
  சாதிய வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் துரைமுருகன் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  வேலூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் அமைச்சர் துரைமுருகன் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் இந்த புகாரின் பேரில்  விசாரணை நடத்தி 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  சுப்ரமணி  வழங்கிய புகாரில் அமைச்சர் துரைமுருகன் தவிர அவரது உறவினர்கள் முருகன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் பெயரும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: