• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை இறப்பு குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக எச்.ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை இறப்பு குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக எச்.ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்

எச்.ராஜா - சிவகார்த்திகேயன்

எச்.ராஜா - சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் எச்.ராஜா கருத்து தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

  • Share this:
    பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின்  தந்தை இறப்பு குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. எச்.ராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையான ஜெயிலர் ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது பாபநாசம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஜவாஹிருல்லா தான் என்ற கருத்தை கூறியிருந்தார். எச்.ராஜாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் பொய்யான கருத்துகளை பரப்பிவருவதாக எச் ராஜா மீது மனித நேயமக்கள் கட்சி வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அப்ரார் ,

    Also Read :  அரசு அதிகாரிகளை மிரட்டும் திமுகவினரை முதல்வர் கண்டிக்க வேண்டும் - ஓபிஎஸ்

    நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையான ஜெயிலர் தாஸ் மாரடைப்பு காரணமாக பல வருடங்களுக்கு முன்பு இறந்ததாகவும், வேண்டுமென்றே எச்.ராஜா சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவின் பெயரை கெடுப்பதற்காக பொய்யான கருத்துகளை பரப்பி வருகிறார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் எச்.ராஜா கருத்து தெரிவித்து வருகிறார்.

    Also Read :  தமிழகத்தில் 2-வது நாளாக குறைந்து வரும் கொரோனா தொற்று

    எச் ராஜா அவதூறு கருத்துகளை பரப்பிவிட்டு மன்னிப்பு கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இந்த முறை மன்னிப்பு கேட்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். இதே போல் தமிழகம் முழுவதும் மனித நேய மக்கள் கட்சி சார்பாக எச் ராஜா மீது புகார் அளித்துள்ளதாகவும், நடிகர் சிவகார்த்திகேயனும் தலையிட்டு எச்.ராஜா மீது புகார் அளிக்க வேண்டும் என வலியுறுத்திள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: