சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சரவணன். சிறுச்சேரியில் உள்ள ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, சிறுசேரியில் உள்ள மற்றொரு ஐடி நிறுவனத்தில் பொறியாளராக உள்ளார். இந்த நிலையில், தங்கள் வீட்டில் பீரோவில் இருந்த 130 சவரன் தங்க நகைகளை நள்ளிரவில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதாக சரவணனும் அவரது மனைவியும் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, எம்.ஜி.ஆர் நகர் போலீசாரும், அசோக் நகர் காவல் உதவி ஆணையரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீசார் வீட்டை முழுவதுமாக சோதனை செய்து கொண்டிருந்த போது, கொள்ளையடிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட 130 சவரன் நகைகளும் பீரோவில் இருந்தது தெரியவந்தது. இதனால், ஐடி தம்பதி மீது சந்தேகமடைந்த போலீசார், இருவரிடமும் கிடுக்கு பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது, தனது மனைவி மற்றும் குழந்தைகள் தனி அறையிலும் தாம் தனி அறையிலும் உறங்கியதாகவும் சரியாக நள்ளிரவு 12.30 மணி அளவில் வீட்டில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டதாகவும் சரவணன் தெரிவித்தார். காலையில் எழுந்து பார்த்தபோது பீரோ திறந்திருந்ததாகவும், சோதனை செய்து பார்த்தபோது நகைகள் இல்லாததால் பதற்றமடைந்து போலீசில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், எலி தொல்லை காரணமாக பாத்திரங்கள் உருண்டு விழுந்ததும், அதை கொள்ளையர்கள் என ஐடி தம்பதியினர் தவறாக நினைத்து புகார் அளித்ததும் தெரியவந்தது. பதற்றமடைந்ததால் இது போன்ற தவறுகள் ஏற்படும் என்றும் பொருட்கள் காணவில்லை என்றால் நிதானத்துடன் தேடுமாறும் அவர்களுக்கு அறிவுரை அளித்துவிட்டு, போலீசார் அங்கிருந்து சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gold Theft