புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.4.84 கோடி மதிப்பிலான தங்க நகைகள் காணவில்லை என வங்கி முதுநிலை மேலளார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த திருக்கட்டளை சேர்ந்த மாரிமுத்து கடந்த 6 தினங்களுக்கு முன்பு வங்கியில் அடகு வைத்த நகைகளுடன் மாயமாகி உள்ளதாக கூறப்பட்டது. நேற்று மாரிமுத்துவின் உடல் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது.
இந்நிலையில் ரூ.4.84 கோடி மதிப்பிலான 13.75 கிலோ தங்க நகை காணவில்லை என வங்கியின் முதுநிலை மேலாளர் மாரீஸ் கண்ணன் புதுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் நகர துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் காவல் ஆய்வாளர் வாசுதேவன் உள்ளிட்டவர்களிடம் புகார் அளித்துள்ளார்.
Also watch
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.