கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம் - அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம் - அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தோழர் தா.பாண்டியன்

உயர்நிலை சிறப்பு மருந்துவர்கள், தோழர்.தா.பாண்டியன் உடல் நிலையைக் கண்காணித்து தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 • Share this:
  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

  இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் . தா .பாண்டியன் கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

  தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணி ராஜன், டாக்டர் தினேஷ் உள்ளிட்ட உயர்நிலை சிறப்பு மருந்துவர்கள் தோழர்.தா.பாண்டியன் உடல் நிலையைக் கண்காணித்து தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published: