ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது

நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது

Nallakannu: நல்லக்கண்ணுக்கு தகைசால் தமிழர் விருதையும் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பொதுவுடமைவாதியும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணுக்கு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

  தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், ‘தகைசால் தமிழர்’ என்ற விருது கடந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் ‘தகைசால் தமிழர்’ விருது பெறும் விருதாளருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திரதின விழாவின்போது, முதலமைச்சரால் வழங்கப்படும்.

  கடந்த ஆண்டிற்கான‘தகைசால் தமிழர்’ கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் சங்கரய்யாவிற்கு வழங்கப்பட்டது. அரசு வழங்கிய ரூ.10 லட்சத்தை கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசுக்கே வழங்குவதாக சங்கரய்யா அறிவித்தார். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணுக்கு அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை நல்லக்கண்ணு சந்தித்து நன்றி தெரிவித்தார்.

  இந்நிலையில், சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து நல்லக்கண்ணுக்கு தகைசால் தமிழர் விருதையும் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட விருதுகளையும் விருதாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: CM MK Stalin, Independence day, Nallakannu