பா.ஜ.க அரசின் வன்முறை குறித்து ரஜினிகாந்த் பேசுவாரா? டி.ராஜா கேள்வி

தலித் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள், அதேபோன்று பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள், இதுகுறித்து ரஜினிகாந்த் கருத்துக்கூற தயாராக உள்ளாரா?

Web Desk | news18
Updated: April 12, 2019, 7:35 PM IST
பா.ஜ.க அரசின் வன்முறை குறித்து ரஜினிகாந்த் பேசுவாரா? டி.ராஜா கேள்வி
டி.ராஜா
Web Desk | news18
Updated: April 12, 2019, 7:35 PM IST
மோடி அரசில் தலித் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள், பழங்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ரஜினிகாந்த் பேசுவாரா என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க ஆட்சி காலத்தின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. ரஜினிகாந்த் எத்தனை தேர்தல் அறிக்கை படித்தார் என தெரியவில்லை. பல கட்சிகள் நதிநீர் இணைப்பு பற்றி பேசியுள்ளது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை மட்டும் அவர் கண்ணில் பட்டது எப்படி என்பது எனக்கு தெரியவில்லை. ரஜினிகாந்த் எந்த நிலையில் பேசுகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

பிரதமர் மோடி எல்லோருக்குமான அரசு எல்லோருக்குமான திட்டங்கள் என பேசினார். அதே நேரத்தில் இந்த அரசு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியதா? என ரஜினிகாந்த் பேச வேண்டும்.


தலித் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள், அதேபோன்று பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள், இதுகுறித்து ரஜினிகாந்த் கருத்துக்கூற தயாராக உள்ளாரா?

பொதுத்துறை நிறுவனங்களை எப்பொழுதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து வருகிறது. அதே நேரத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் வேதாந்தா என்ற கார்ப்பரேட் நிறுவனத்துடன் சேர்ந்து மாநில அரசுக்கு எதிராக செயல்படுகிறது. அதனை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்.

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி ஊழலுக்கு துணை போகிறார் என்பது தெளிவாக வெளிவந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

Loading...

Also see:

First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...