1000 கிலோ ஆட்டுக்கறி.. 2000 கிலோ அரிசி...! மத நல்லிணக்க விருந்தாக 15 ஆயிரம் பேருக்கு பிரியாணி

1000 கிலோ ஆட்டுக்கறி.. 2000 கிலோ அரிசி...! மத நல்லிணக்க விருந்தாக 15 ஆயிரம் பேருக்கு பிரியாணி
News18
  • News18
  • Last Updated: January 20, 2020, 10:14 AM IST
  • Share this:
திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் மத நல்லிணக்க விருந்தாக, 15 ஆயிரம் பேருக்கு கைமா பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டது.

திண்டுக்கல் நாகல் நகர் பள்ளிவாசலில் முகமது நபி, ரசரூல்லா சல்லாகி ஆகியோரின் நினைவாக கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு மதநல்லிணக்க விருந்தாக பொதுமக்களுக்கு கைமா பிரியாணி இலவசமாக வழங்கப்படும்.

அந்த வகையில் நடப்பாண்டு 1000 கிலோ ஆட்டுக்கறி, 2 ஆயிரம் கிலோ அரிசி, 100 கிலோ தக்காளி, கத்திரிக்காய், 30 ஆயிரம் முட்டைகள் கொண்டு கைமா பிரியாணி தயார் செய்யப்பட்டது.


சமையல் பணியில் பள்ளிவாசலைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் முதல் விடியற்காலை வரை அண்டாக்கள் நிரம்ப பிரியாணி சமைக்கப்பட்டது. நேற்று காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை பிரியாணி பொதுமக்களுக்கு வழங்கப்படும் என பள்ளிவாசல் சார்பில் அறிவிக்கப்பட்டது.இதனால் காலை முதலே பாத்திரங்களுடன் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் காத்திருந்த மக்கள், மணக்க மணக்க தயாரான பிரியாணியை வாங்கிச் சென்றனர்.Also See..

இந்து முறைப்படி மசூதியில் திருமணம்: இந்தியாவைத் திரும்பிப் பார்க்கவைத்த கேரள தம்பதி
First published: January 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்