விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. அந்த மையத்திற்குள் வாக்கு எண்ணும் அலுவலர்கள் முதலில் அனுமதிக்கப்பட்டனர். அடுத்து முகவர்கள் அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் முண்டியத்து வந்ததால் போலீசார் கட்டுபடுத்த முடியாமல் திணறினர்.
இதனால் நுழைவு வாயில் இரும்பு கதவை போலீசாரும் முகவர்களும் அவரவர் பக்கம் இழுக்க பதற்றமானது. ஒரு கட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் போலீஸ் தடை மீறி, அங்கே காத்திருந்த ஒட்டுமொத்த முகவர்களும் முண்டியடித்து உள்ளே நுழைந்தனர். இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு காணப்பட்டது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. அதற்னாக வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்று வருகின்றது. பல்வேறு இடங்களில் அமைதியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், சில இடங்களில் பரபரப்பு நிலவி வருகின்றது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நெல்வாய் பகுதியில் உள்ள ஏ.சி.டீ கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் , ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்கப்படவில்லை என்று அலுவலர்களும், முகவர்களும் குற்றம்சாட்டிய நிலையில், அங்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணி தாமதமானது. இதனால், முகவர்கள் வாக்கு எண்ணும் மேசையில் தலைவைத்து தூங்கினர்.
Must Read : ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 முடிவுகள் நேரலை
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஆங்காங்கே வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.