• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டெல்டா மாவட்டங்களில் பயிர்‌ சேத விவரங்களைப்‌ பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள்‌ குழு அமைப்பு: முதல்வர் அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களில் பயிர்‌ சேத விவரங்களைப்‌ பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள்‌ குழு அமைப்பு: முதல்வர் அறிவிப்பு

 பயிர்‌ சேத விவரங்களைப்‌ பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள்‌ குழு அமைப்பு: முதல்வர் அறிவிப்பு

பயிர்‌ சேத விவரங்களைப்‌ பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள்‌ குழு அமைப்பு: முதல்வர் அறிவிப்பு

மழை வெள்ளம்‌ பாதித்த டெல்டா மாவட்டங்களில்‌ பயிர்‌ சேத விவரங்களைப்‌ பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள்‌ குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  • Share this:
    சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்து வருகிறது. அதனால், பலபகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. அதனால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக டெல்டா பகுதிகளில் கனமழை காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

    இந்நிலையில், மழை வெள்ளம்‌ பாதித்த டெல்டா மாவட்டங்களில்‌ பயிர்‌ சேத விவரங்களைப்‌ பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள்‌ குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின்‌ பல பகுதிகளில்‌, குறிப்பாக டெல்டா
    மாவட்டங்களில்‌ பரவலாகப்‌ பெய்து வரும்‌ கனமழையின்‌ காரணமாக பயிர்கள்‌ மழை நீரில்‌ மூழ்கியுள்ளன.

    இதுகுறித்து ஆய்வு செய்து, தற்போது பயிர்களைக்‌ காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும்‌, பயிர்‌ சேத விவரங்களை அறியவும்‌, அமைச்சர்கள்‌ அடங்கிய குழு ஒன்றினை கூட்டுறவுத்‌ துறை அமைச்சர்‌ ஐ.பெரியசாமி தலைமையில்‌ அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின்‌ இன்று (11-11-2021) உத்தரவிட்டுள்ளார்‌.

    இந்தக்‌ குழுவில்‌, மாண்புமிகு தொழில்‌ துறை அமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசு, ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ கே.ஆர்‌.பெரியகருப்பன்‌, மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர்‌ எஸ்‌. ரகுபதி, பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி, சுற்றுச்சூழல்‌, காலநிலை மாற்றம்‌ இளைஞர்‌ நலன்‌
    மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ சிவ.வீ.மெய்யநாதன்‌ ஆகியோர்‌ இடம்‌ பெற்றுள்ளனர்‌.

    இந்தக்‌ குழுவினர்‌ உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்குச்‌ சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளைப்‌ பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்திட ஏதுவாக முதலமைச்சர்‌ அவர்களுக்கு அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்‌.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: