கந்துவட்டி கும்பல் மிரட்டியதாக இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் போராட்டம்..

ஆம்பூர் அருகே கந்துவட்டி கும்பல் மிரட்டியதாக இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார். இதனால் கோபமடைந்த கந்துவட்டி கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சடலத்தை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

கந்துவட்டி கும்பல் மிரட்டியதாக இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் போராட்டம்..
தற்கொலை செய்துக்கொண்டவரின் தாய்
  • Share this:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராபட்டு  பகுதியை சேர்ந்தவர் செல்வம் மல்லிகா தம்பதியினர். இவர்களுக்கு 4  பிள்ளைகள். இவர்களது இரண்டாவது மகன் சிரஞ்சீவி. இவர் வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். தந்தை செல்வம் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீடு அடமானம் வைக்கும் நிலைமைக்கு வந்துள்ளனர். இதனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு (16.05.2018)அரசு தொகுப்பு வீட்டை வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் விநாயகா பைனான்ஸில்  1,25000 ரூபாய்க்கு அடமானம் வைத்து உள்ளனர்.

மாதம் 7,500 விகிதம் 24 மாத தவணை முறையில் பணம் கட்ட வேண்டும் என்று வீடு அடமானம் வைத்த போது கன்டீஷன் போட்டிருக்கின்றனர் பைனான்ஸ்காரர்கள். இந்நிலையில் 15.04.2020 அன்று தவணை முடிவடைந்த நிலையில் கொரோனா சூழலால் சில மாதங்களாக பணம் கட்ட இயலவில்லை.


இதனால் நேற்று இரவு குடியாத்தம்  ஸ்ரீ சாய் விநாயகா  பைனான்ஸ் இருந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல் வீட்டில்  இருந்த சிரஞ்சீவியை அவதூறாக பேசி 2 நாட்களுக்குள் வீடு காலி செய்ய வேண்டுமென்று மிரட்டல் விடுத்து  சென்றுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சிரஞ்சீவி இன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் உடலை கைப்பற்றிய ஜோலார்பேட்டை  ரயில்வே  காவல்துறையினர் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து  பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

தற்கொலை வழக்கு என்று பதிவு செய்ததால்  ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சடலத்தை அடக்கம் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய  காவல்துறையினர் சிரஞ்சீவி உறவினர்கள் மற்றும்  பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பின்னர் நாளை கந்து வட்டி கும்பல் மீது வழக்குப்பதிவு  செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு சிரஞ்சீவியின் உடலை தகனம் செய்தனர்.

மேலும் படிக்க...ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால் விரக்தி.. கூலித்தொழிலாளியின் மகனான 10-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை..

இதுகுறித்து அவருடைய தாயார் மல்லிகா கூறுகையில் , ஏற்கனவே 90,000 ரூபாய் பணம் கட்டி உள்ளதாகவும் மீதமுள்ள தொகை 35,000 ரூபாய் கட்ட வேண்டும். ஆனால் அவர்கள் 1,0,40,000 ரூபாய் கேட்கின்றனர். இதனால் ஏற்பட்ட  மன உளைச்சல் காரணமாகவே என்னுடைய மகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றார்.

மேலும் அவருடைய உறவினர் கூறுகையில், தொடர்ச்சியாக இந்த பைனான்சியர்கள் வந்து வீட்டின் முன்பு தேவையற்ற தகாத வார்த்தையில் திட்டி அவரை மேலும் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். அதனால் இந்த விபரீத முடிவை எடுத்து விட்டதாகவும் கூறினார்.மேலும் இந்த கந்துவட்டி கும்பல் குறித்து முழுமையான விசாரணை செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading